தற்போதைய செய்திகள்

விருதுநகரில்  இடிமின்னல் தாக்கியதில்  கல்லூரி மாணவர் சாவு

விருதுநகர் பகுதியில் இடிமின்னல் தாக்கியதில் கல்லூரி இறுதியாண்டு மாணவர் ஒருவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் பகுதியில் இடிமின்னல் தாக்கியதில் கல்லூரி இறுதியாண்டு மாணவர் ஒருவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

    விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் அய்யனார்(21). இவர் இப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை இரவு இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, மொட்டைமாடியில் பலத்த காற்றினால் கேபிள் வயரை இணைப்பு விலகியிருந்தது. அந்த கேபிள் வயரை சரி செய்யும் போது இடிமின்னல் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT